0
தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான நடிகராக உலா வரும் விமல் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ வடம் ‘ என பெயரிடப்பட்டு, இதன் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது.
இயக்குநர் வி. கேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வடம் ‘எனும் திரைப்படத்தில் விமல், சங்கீதா, பால சரவணன், நரேன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். தமிழ் மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்த வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு எனும் கிராமிய பாரம்பரிய விளையாட்டின் பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை மாசாணி பிக்சர்ஸ் மற்றும் சன் மாரோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் தொடக்க விழா கோவையில் உள்ள மாசாணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்கு பற்றினர். விமல் நடிக்கும் கிராமிய பின்னணியிலான திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்களிடம் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.