• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

விமல் பரம் எழுதிய  தீதும் நன்றும் சிறுகதைத்தொகுதி வெளியீடு நாளை இலண்டனில்

Byadmin

Oct 10, 2025


ஈழத்து எழுத்தாளர் விமல் பரம் எழுதிய  தீதும் நன்றும் சிறுகதைத்தொகுதி நாளைய தினம்  (அக்டோபர் மாதம் 11ம் திகதி) இலண்டனில் அறிமுகம் காண்கின்றது.

போருக்குப் பிந்தைய மக்களின் நிலை, கிளிநொச்சி மக்களின் வாழ்வியல் பண்பாடு, பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எனப் பல்வேறு விடயங்களைப் பேசும் இந்த நூலினை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரி விமல் பரம் எழுதியுள்ளார்.

ஈழத்தில் இருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்த நூலின் வெளியீடு, 11/10/2025ஆம் நாளன்று மாலை 6மணிக்கு St. Andrew’s Church Hall, Malvern Avenueஈ South Harrow, HA2 9ERஇல் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளர் மற்றும் இலண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் தலைமை ஆசிரியர் மாதவி சிவலீலனின் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் அகல்யா நித்தியலிங்கம், திருப்பரங்குன்றன் சுந்தரம்பிள்ளை, ஜெயஶ்ரீ சதானந்தன், சுகுணா சுதாகரன், திருமகள் சிறிபத்மநாதன், சிவாஜினி ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

அழைப்பிதழ்

By admin