• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

விமானம் வானில் பறக்கும்போதா, தரையிறங்கும்போதா? மோசமான விபத்துகள் எப்போது நிகழ்ந்துள்ளன?

Byadmin

Jun 22, 2025


ஆமதாபாத் விமான விபத்து

பட மூலாதாரம், Chetan Singh

படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில் குறைந்தது 270 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஜூன் 12 முதல் 17 வரை, 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA-வின் அறிக்கையின்படி, ரத்து செய்யப்பட்ட 83 விமானங்களில் 66 விமானங்கள் அனைத்துமே குஜராத்தின் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787 ரக விமானங்கள்.

ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாகும்.

ஜூன் 12ஆம் தேதி, ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI-171 தனது பயணத்தைத் தொடங்கியது.

By admin