இத்துறையில் நிலவும் பதற்றத்தின் அறிகுறியாக, ரஷ்ய அரசாங்கம் “ரஷ்யாவிலிருந்து ஜெட் எரிபொருள் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை” விதிப்பதாக அறிவித்துள்ளது. “உள்நாட்டு எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம்,” என்று ரஷ்யா தெரிவித்தது.
அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் கீழ் செய்யப்படும் சரக்கு விநியோகங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று ரஷ்யா தெளிவுபடுத்தியது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஜாம்பவான்களில் ஒன்றான ரஷ்யா, உக்ரைன் போரின்போது சந்தையில் அழுத்தங்கள் அதிகரித்து வருவதால், கார் எரிபொருள் ஏற்றுமதிக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
தினசரி ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைன், சமீப வாரங்களில் ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.