விமான ஓடுதளத்தில் சாமி ஊர்வலம், மூடப்பட்ட விமான நிலையம் – எங்கு நடந்தது?
விமான நிலையத்தில் மிக அரிதாகவே இப்படியொரு காட்சியை நீங்கள் பார்க்க முடியும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் திருவிழாவை ஒட்டி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, சில மணிநேரங்கள் மூடப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்துக்குச் சொந்தமான இந்த விமான நிலையம் பின்பு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது தனியார் நிறுவனமான அதானி குழுமம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மத நிகழ்வுகளுக்காக மூடப்படும் மிகச் மிகச் சில விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு