5
ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள துணை மின்நிலைய தீயினால் ஏற்பட்ட மின்சார இழப்பைத் தொடர்ந்து சனிக்கிழமை முழு சேவையும் இயல்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் மாலை ஹேய்ஸில் உள்ள நார்த் ஹைட் ஆலையில் தீப்பிழம்புகள் பரவியதால், வெள்ளிக்கிழமை முழுவதும் விமானங்கள் தரையிறக்கப்பட்டதால் சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் வோல்ட்பை, சிக்கித் தவிக்கும் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டார்.
இந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த மெட் பொலிஸார் இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக இல்லை என உறுதி செய்தனர்.