• Tue. May 6th, 2025

24×7 Live News

Apdin News

வியட்நாமில் போர் வீரர்கள் நினைவிடத்தில் அநுர அஞ்சலி (படங்கள் இணைப்பு)

Byadmin

May 6, 2025


வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட அநுரகுமார, சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

The post வியட்நாமில் போர் வீரர்கள் நினைவிடத்தில் அநுர அஞ்சலி (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin