சுடரி விருதுகள் நிறுவனரும் தமிழ் மகளீர் அபிவிருத்தி மன்றத் தலைவரும் தமிழ் சமூகச் செயற்பாட்டாளருமான ரஞ்சனா சதானந்தன் அவர்கள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 4ம் திகதி இலண்டனில் நடைபெற இருக்கும் 2025ம் ஆண்டுக்கான சுடரி விருதுகள் நிகழ்வு தொடர்பாக வணக்கம் இலண்டனின் ஒரு நிமிட நேர்காணலுக்கு வழங்கிய பதில்…
பெண்களின் ஆளுமையைப் பெருமைப்படுத்தும் சுடரி விருதுகள் சாதிப்பது என்ன?
இலண்டனில் இரண்டாவது தடவையாக சுடரி விருதுகள் விழா நடைபெறுகின்றது. கடந்தமுறை விருதுகள் வழங்கும் நிகழ்வுக்குக் கிடைக்கப்பெற்ற பேராதரவினைத் தொடர்ந்து இவ்வாண்டும் தமிழ்ப் பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்துகின்றோம்.
இலங்கைத் தமிழ் பெண்களுக்கான களங்கள் பெரிதாக இல்லாதவிடத்து, எமது பெண்களுக்கான தளமாக நாம் இருப்பதுவும் எம் மிகப்பெரிய சாதனையாகவே கருதுகின்றோம். இந்த விருதுகள் ஒரு பெண்ணின் வெற்றியை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் பெருமையையும் கொண்டாடுகிறது. இதனூடாக மறைக்கப்பட்ட சாதனைகளை வெளிச்சமிடுவதோடு சமூகத்தில் அமைதியாக, தன்னலமின்றி உழைக்கும் பெண்களின் கதைகளை உலகம் முழுவதும் கேட்கவைக்கின்றோம்.
மனித சமூதாயம் இயங்கு நிலையில் இருப்பதற்கு அடையாளப்படுத்தலும், ஊக்கப்படுத்தலும் மிகவும் அவசியம். வெளியே தெரியாமல் பெரும் அறத்தைச் செய்தவர்களை அடையாளப்படுத்திக் கொண்டாடுவதும், அதனூடு இளையவர்களின் சமூக சிந்தனைகளைத் தட்டிக்கொடுப்பது மட்டுமன்றி முன்னுதாரணங்களை உருவாக்குவதும் எமது நோக்கம்.
விருது பெறுபவர்களின் பயணம் அடுத்த தலைமுறைக்கு தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு ஆகியவற்றை வழங்கும் என்பது எமது நம்பிக்கை. இதனைச் சாதிப்பதற்கான முயற்சிதான் எமது சுடரி விருதுகள்.
The post விருதுகள் ஒரு பெண்ணின் வெற்றியை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் பெருமையையும் கொண்டாடுகிறது – ரஞ்சனா சதானந்தன் appeared first on Vanakkam London.