• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

“விரும்பவில்லை என்றால் வாங்காதீர்கள்” – எண்ணெய் விற்பனை குறித்து அமெரிக்காவுக்கு பதில்

Byadmin

Aug 24, 2025


ஜெய்ஷங்கர்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. யுக்ரேன் போர் தொடர இந்தியா எண்ணெய் வாங்குவதும் ஒரு காரணம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அதே போல, ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கி வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாகவும் இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவர்ரோ ஆகியோர் இந்தியாவை வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

இந்தச் சூழலில், எகனாமிக் டைம்ஸ் நிகழ்வில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, “விரும்பவில்லை என்றால் வாங்காதீர்கள்” – அமெரிக்காவுக்கு ஜெய்ஷங்கர் பதில்

எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றம் 2025 இல் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் , “வர்த்தகத்தை ஆதரிக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்காக வேலை செய்யும் மக்கள், மற்றவர்கள் வர்த்தகத்திற்கு ஆதரவானவர்கள் எனக் குற்றம் சாட்டுவது அபத்தமானது” என்றார்.

By admin