• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

விழுப்புரம்: ரூ.5 கோடி நகை கொள்ளை வழக்கில் சிசிடிவி காட்சி மூலம் துப்பு துலக்கியது எப்படி?

Byadmin

Mar 8, 2026


விழுப்புரம், ரூ.5 கோடி நகை கொள்ளை, 2,000 சிசிடிவி காட்சிகள், புதுச்சேரி காவல்துறை

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“பொதுவாக சில வழக்குகளில் தங்கம் கொள்ளை போனதாக சிலர் நாடகம் ஆடுவார்கள். ஆனால், இது உண்மையாகவே நடந்த கொள்ளையாக இருந்தது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை 48 மணிநேரத்தில் நெருங்கிவிட்டோம்”

விழுப்புரத்தில் மார்ச் 3 ஆம் தேதி நான்கு கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய் பிரணீத் பிபிசி தமிழிடம் இவ்வாறு தெரிவித்தார்.

கொள்ளை போன நான்கு கிலோ தங்க நகைகளும் 3 லட்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுவிட்டதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்க நகைகளின் இன்றைய சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தங்கக் கொள்ளை விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் பிடிபட்டது எப்படி?

4 கிலோ தங்க நகைகள் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பத்தில் உள்ள பாதை கனகராஜ் கார்டனில் வசிக்கும் ராஜமாணிக்கம், தங்க ஆபரணங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

By admin