• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

விவசாயத்தில் புரட்சி நாட்டில் வேண்டும் | நதுநசி

Byadmin

Jan 28, 2026


நெல்லின் முதிர்ச்சி;
காய்த்து பழுத்தவை
காய்த்து கிடந்தன;
பொலிக் கொடியோடு.

வயலில் உழைத்த
ஒரு போகம் முடித்து;
விளைச்சல் அறுத்து
பயனடையும் நேரம்.

நடந்தது கோரம்
வெறுத்திடும் வகை.
கேட்பார் யாருளரோ?
இந்த அநீதியை இங்கே!

நெல்லின் விலையில் :
இறக்குமதி அரிசி,
காட்டும் தாக்கம் தெரியும்;
இருந்தும் நடக்கிறதே!

வளரும் நெல் – வயலில்
இருக்கும் போது – அரிசி
இறக்குமதி நடத்தலே
வெறுப்பைத் தந்திடும் போது.

அறுவடை காலத்தில்
நடந்திடும் இந்த
கொள்வனவின் நோக்கம்
விவசாயி அவர் நட்டமோ?

மிகையாக உற்பத்தி
நடந்திட வேண்டும்.
அதற்கிங்கே வழிகள்
கண்டு செயலாக வேண்டும்.

விளைச்சல் இல்லாத
உலக நாடுகள் தேடி
அங்கே செய்ய வேண்டும்
அரிசி ஏற்றுமதி.

நெல்லை அரிசியாக்கி
தவிட்டை எடுத்து
நாட்டில் பயனாக்க வேண்டும்.
உமியையும் கூடவே சேத்து.

விவசாயத்தில் புரட்சி
நாட்டில் வேண்டும்.
வளமிருந்தும் தோற்று நாம்
நகைப்புக்கிடம் கொடுப்பதோ?

நதுநசி

The post விவசாயத்தில் புரட்சி நாட்டில் வேண்டும் | நதுநசி appeared first on Vanakkam London.

By admin