• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

விஷ காளான் மூலம் 3 பேர் கொலை; முன்னாள் கணவரையும் கொல்ல முயற்சித்த பெண்ணின் சதி

Byadmin

Aug 10, 2025


விஷ காளான் மூலம் 3 பேர் கொலை; முன்னாள் கணவரையும் கொல்ல முயற்சி - பெண்ணின் சதித்திட்டம் அம்பலமானது எப்படி?

ஆஸ்திரேலியாவில் மூன்று பேரைக் கொலை செய்த குற்றவாளி எரின் பேட்டர்சன், தனது கணவருக்கு பலமுறை விஷம் கொடுக்க முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கணவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில் தங்கள் மகள் தயாரித்ததாக கூறப்பட்ட பிஸ்கெட்களும் (குக்கீஸ்) இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியப் பெண்ணான எரின் பேட்டர்சன், கடந்த மாதம் மூன்று உறவினர்களை நச்சுக் காளான் கலந்த மாட்டிறைச்சி வெலிங்டன் (toxic mushroom-laced beef Wellington) உணவால் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

50 வயதான எரின் பேட்டர்சனும், அவரது கணவர் சைமன் பேட்டர்சனும் பிரிந்து வாழ்கின்றனர்.

By admin