• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

வி ஜே சித்து கதையின் நாயகனாக நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் தொடக்க விழா

Byadmin

Oct 29, 2025


‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான  நடிகர் வி ஜே சித்து கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்’ டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரொமான்டிக் கொமடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இதன் தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினரை வாழ்த்தினர்.‌ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin