• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

வி.நாராயணன்: இஸ்ரோ தலைவராகும் இவர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று சாதித்தது எப்படி?

Byadmin

Jan 9, 2025


வி.நாராயணன், இஸ்ரோ தலைவர், தமிழ்வழிக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராகிறார்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம், ககன்யான் திட்டம் என இந்தியாவின் விண்வெளித் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு அடுத்ததாக அவர் பதவியேற்கவுள்ளார்.

முனைவர் நாராயணன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக இருந்து வருகிறார். சந்திரயான் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார்.

By admin