• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

வீட்டின் மீது மோதிய கார்; சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

Byadmin

Aug 4, 2025


இங்கிலாந்தின் Royston நகரின் Cromwell Way பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது BMW கார் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனான ரபி ஷேக் மிகவும் மென்மையானவர் என்று குடும்பத்தினர் கூறினர்.

இளைஞரின் குடும்பத்தினர் அவரை “எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் வெளிச்சம்” என்று வர்ணித்தனர்.

ரபி ஷேக், அவரது குடும்பத்தினரால் “மென்மையானவர், பாசமுள்ளவர், மரியாதைக்குரியவர் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு கவனமுள்ளவர்” என்றும் விவரித்தனர்.

குறித்த இளைஞன் தனது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நன்கு விரும்பப்பட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கில் சுமார் 6,000 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் இளைஞருடன் காரில் மேலும் இரண்டு ஆண்கள் இருந்ததாக நகர பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், மற்றொருவரும் மோசமான நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது வீட்டினுள் இருந்தவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

By admin