• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

வீட்டில் வினிகர் கொண்டு சுத்தம் செய்வதன் நன்மைகள் என்ன? உப்புக்கறை மட்டுமல்ல வேறு எதை அகற்றும்?

Byadmin

May 23, 2025


வினிகர், சுற்றுச்சூழல், சுத்தம், பாக்டீரியாக்கள், கிருமி நாசினி, வேதியியல்

பட மூலாதாரம், Getty Images

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய புதிய பெர்லின் அபார்ட்மெண்டில் எனக்கும் என்னுடைய கழிப்பறை இருக்கைக்கும் இடையே ஒரு போராட்டம் நடந்தது. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதன் உள்ளே படிந்திருக்கும் உப்புக்கறைகளை அகற்ற முடியவில்லை. விரக்தியடைந்த நான் கூகுளைப் பார்த்தேன். அதில் வினிகரை பரிந்துரைத்த ஒரு பக்கத்தைக் கண்டேன். முந்தைய குடியிருப்பாளர் வினீகரை ஏராளமாக விட்டுச் சென்றிருந்தார்.

எனவே இரண்டு தேக்கரண்டி “Essigessenz” அதாவது செறிவூட்டப்பட்ட வினிகரை அதற்குள் ஊற்றி அரை மணி நேரம் காத்திருந்த பிறகு தேய்த்து சுத்தம் செய்தேன். சிறிது நேரத்தில் உப்புக் கறைகள் காணாமல் போய்விட்டன.

அப்போதிலிருந்து எங்கு உப்புக் கறைகள் இருந்தாலும் அவற்றை அகற்ற நான் வினிகரை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய சிங்க்கை மின்னச் செய்வதில் என்னுடைய வழக்கமான சமையலறை ஸ்ப்ரே கிளீனரை விட இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தேன். இதில் குழாய்களும் அடங்கும். அவற்றை வினிகரில் நனைத்த சமையலறை டிஷ்யூவால் சுற்றினேன்.

நான் வழக்கமாக சுத்தம் செய்யும் ஸ்ப்ரே இதற்கு எதிரே தோற்றுப்போனது. உப்புக் கறை படிந்த கண்ணாடி கெட்டிலை சுத்தம் செய்ய சிறப்பு மாத்திரைகள் வாங்குவதற்கு பதிலாக நான் இரண்டு தேக்கரண்டி அடர் வினிகரை அதில்விட்டு கொதிக்க வைத்தேன். உப்பு கறை கரையத் தொடங்கி சிறிது நேரத்தில் கெட்டில் பளபளப்பாக ஆனது.

By admin