• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

வீட்டு உரிமையாளர் ஆவதில் நெருக்கடியை எதிர்நோக்கும் இங்கிலாந்து இளைஞர்கள்!

Byadmin

Sep 24, 2025


இங்கிலாந்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் வீட்டு உரிமையாளர் ஆவதற்கான அல்லது வாடகைக்குக் குடியேறும் திறன் ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

காரணம், வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், பல இளைஞர்கள் தாங்கள் சம்பாதித்த சுதந்திரத்தை இழந்து மீண்டும் பெற்றோர் வீடுகளுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

லியோனி கிளான்சி (Leoni Clancey) மற்றும் அவரது காதலர் தங்கள் முதல் வாடகை வீட்டிற்குச் செல்ல பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்தனர். ஆனால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர்களது அனைத்து சேமிப்பும் வாழ்க்கைச் செலவுகளுக்காக (living costs) கரைந்துபோனதால், இருவரும் மீண்டும் பெற்றோர் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிபிசி செய்தியில் தெரிவித்துள்ளனர்.

21 வயதான லியோனி, தற்போது தனது 10 வயது தங்கையுடன் ஒரே படுக்கையறையைப் பகிர்ந்துகொள்கிறார். இந்த பின்னடைவு அநீதியானது என்று அவர் கருதுகிறார். மேலும், இது தனக்குச் சொந்தமான இடம் போல உணராததால், தனக்கு இருந்த சுதந்திரத்தை இழந்ததற்காக அவர் வருந்துகிறார்.

வீட்டை நடத்துவதற்கு ஆகும் செலவு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக லியோனி கூறுகிறார்.

குறிப்பாக, பயன்பாட்டு வரிகள் (utilities), கவுன்சில் வரி (council tax) மற்றும் வாடகை (rent) ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்தில் பெற்றோருடன் வாழும் வயது வந்தவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

படிப்பை நிறைவு செய்த அல்லது கல்வி கற்காத, பெற்றோருடன் வசிக்கும் வயது வந்தவர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் 4.2 மில்லியனாக இருந்தது.

இது 2021ஆம் ஆண்டில் இது 4.9 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (Office for National Statistics) தெரிவித்துள்ளது.

The post வீட்டு உரிமையாளர் ஆவதில் நெருக்கடியை எதிர்நோக்கும் இங்கிலாந்து இளைஞர்கள்! appeared first on Vanakkam London.

By admin