வலி நிறைந்த
காடும் நிலமும்
அந்த வானும்
கடலோடு நாமும்.
வீழ்ந்தோம் என்று
சொல்லி விட்டு
விலகிப் போகும்
சொந்தம் கண்டு.
நொந்து போகும்
நெஞ்சத்தில் தான்
தாகம் இருக்கிறது.
தஞ்சம் என்று வந்து.
இன்று ஈழத்தில்
முன்னாள் போராளி.
வாழும் நியங்கள்
மானமா வீரர்கள்.
கடினமான போரில்
கனமான வாழ்வில்
வீரியமான போர்க்களம்
போரில் வென்றவர்கள்.
வீரத்தின் விளைநிலம்
விழுதுகளின் வாழிடம்.
வீணர்களின் வழியில்
சிதைந்து போகிறது.
இத்தனை துயர்
கடந்த வாழ்விலும்
துன்பங்கள் எல்லாம்
இன்பங்கள் ஒன்றாகிட.
இன்று நடப்பவை
கொடுந் துயரென்று
உங்கள் மனங்கள்
எண்ணிடாதோ இன்று.
நானும் கண்டேன்.
இத்தனை வலியிலும்
வழியில் செத்திடலாம்.
வாழ்வு வலியதென்று.
விடுதலைக்கு போராடி
வீழ்ந்து விட்ட – சக
போராளிகளின் நினைவோடு.
தாய் நிலத்தின் மடியில்.
நதுநசி
The post வீரத்தின் விளைநிலம் விழுதுகளின் வாழிடம் | நதுநசி appeared first on Vanakkam London.