• Sat. Oct 18th, 2025

24×7 Live News

Apdin News

வீரப்பன் யானை வேட்டையை கைவிட்டு சந்தனமரங்களை கடத்த தொடங்கியது ஏன்? முழு பின்னணி

Byadmin

Oct 18, 2025


சந்தனக்கடத்தல் வீரப்பன், வரலாறு, தமிழ்நாடு, கர்நாடகா

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 186.

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு ஐஃஎப்எஸ் அதிகாரி, 2 மாநிலங்களைச் சேர்ந்த 10 வனத்துறை அலுவலர்கள், 31 காவல் துறையினர் உட்பட 123 பேரை வீரப்பன் கொன்றதாக அரசு தரும் புள்ளிவிவரம் கூறுகிறது. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 12 பேர் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தனக்கடத்தல் வீரப்பன், வரலாறு, தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், NAKKHEERAN

திரைப்படங்கள், புனைவுகள், தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ் என பல வடிவங்களில் வீரப்பனின் வாழ்க்கை நிகழ்வுகள், விதவிதமாக வர்ணிக்கப்படுகின்றன. வீரப்பன் வாழ்ந்த காலத்தில், அவரை சந்தித்தவர்கள் வெகுசிலரே.



By admin