• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

வீராசாமி: இந்திய உணவகம் மூடப்படுவதை தடுக்க மன்னர் சார்லசுக்கு கோரிக்கை – என்ன நடக்கிறது?

Byadmin

Feb 25, 2026


லண்டன், வீராசாமி உணவகம்
படக்குறிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வீராசாமி உணவகத்தின் ஆதரவாளர்கள் திரண்டனர்.

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகம் ஒன்று மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு பக்கிங்ஹாம் அரண்மனை வரை சென்றுள்ளது. அந்த உணவகம் மூடப்படுவதை மன்னர் சார்லஸ் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

வீராசாமி என்கிற அந்த உணவகம் 1926 மார்ச் மாதம் நிறுவப்பட்டது. இது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ரீஜென்ட் தெருவில் விக்டரி ஹவுஸில் இயங்கி வருகிறது; இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் தாக்குதலுக்கு உள்ளான போதும் இந்த உணவகம் தொடர்ந்து உணவு வழங்கி வந்தது.

உணவகத்தின் இணை உரிமையாளர் ரஞ்சித் மத்ரானி, வீராசாமி ஓட்டல் “மூடப்படுவதில்” இருந்து காத்து உதவுமாறு மன்னரிடம் கேட்டுக்கொள்வதாகவும், குத்தகையைப் புதுப்பிக்காதது “குறுகிய நோக்கம்” கொண்டது என்றும் கூறினார்.

விக்டரி ஹவுஸில் இருந்து உணவகத்தை அகற்றுவது “நாங்கள் எளிதாக எடுத்த முடிவு அல்ல” என்று கிரவுன் எஸ்டேட் தெரிவித்துள்ளது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு கிரவுன் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறப்பட்டுள்ளது.

கிரவுன் எஸ்டேட் என்பது ஒரு சுதந்திரமாக செயல்படும் ஒரு சொத்து நிறுவனம், இதன் லாபம் கருவூலத்திற்குச் செல்கிறது.

By admin