• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

வீர தீர சூரன் 2 படம் எப்படி உள்ளது? – வின்டேஜ் விக்ரமை திரையில் பார்க்கின்றனரா ரசிகர்கள்?

Byadmin

Mar 30, 2025


வீர தீர சூரன் 2 திரை விமர்சனம், விக்ரம், துஷாரா விஜயன்

பட மூலாதாரம், X/@Chiyaan

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது வீர தீர சூரன் 2.

விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

படத்தை வெளியிடுவது தொடர்பாக பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் அருண்குமார் பேட்டிகளில் கூறியது போல, ‘விண்டேஜ் விக்ரமை’ மீண்டும் திரையில் கொண்டு வந்தாரா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

By admin