• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா!

Byadmin

Nov 2, 2024


இந்தியாவில் பிரபல விமானங்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருந்தன. இதனால் சில விமான போக்குவரத்துகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியை இந்தியா நாடியிருப்பதாக The Hindu தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் இரண்டு வாரங்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 400க்கும் அதிமான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதற்கும் காலிஸ்தான் தனி நாடு கேட்கும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது.

சமூக ஊடகத்தளங்களை வைத்துச் செய்யப்படும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களை அடையாளம் காண, இந்தியாவோடு சேர்ந்து பணியாற்றுவதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பொருளியலை முடக்கும் நோக்கத்துடன் ஏர் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் இருக்கும் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கூறியிருக்கிறார்.

The post வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா! appeared first on Vanakkam London.

By admin