• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

Byadmin

Oct 7, 2025


வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள்.

வவுனியா, நெடுங்கேணி பொலிசார் ஊடாக குறித்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (06.10) வழங்கப்பட்டன.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் அவர்களும் செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக எதிர்வரும் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே குறித்த இருவரையும் வருகை தருமாறு அழைப்பாணை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By admin