0
தேவையான பொருள்கள்
பழுங்கல் அரிசி, பச்சரிசி- தலா 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு- 3 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு- அரை கிண்ணம்
வெந்தயக் கீரை- 5 கட்டு (சிறியது)
உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய்- சிறிதளவு
செய்முறை
உளுத்தம் பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். இரண்டு அரிசிகளையும் கடலைப் பருப்பையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் உளுத்தம் பருப்பை அரைத்துகொண்டு, பின்னர் அத்துடன் ஊறவைத்துள்ள அரிசி, கடலைப் பருப்பையும் போட்டு, பெருங்காயம், உப்பு, மிளகாயையும் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
ஏற்கெனவே அரைத்துள்ள உளுத்தம் பருப்பு மாவுடன் கலந்துகொண்டு, கடைசியாக வெந்தயக் கீரையையும் சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்து எடுக்கவும். தோசைக்கல் சூடானவுடன் சிறிது எண்ணெய்விட்டு அடைகளாக வார்த்து எடுக்கவும்.