வெனிசுலாவில் இந்த சோம்பல் கரடி தனது இனம் முழுமைக்கும் உதவியது எப்படி?
சுவி எனும் ஒரு காயம்பட்ட சோம்பல் கரடி, வெனிசுலாவின் நூற்றுக்கணக்கான சோம்பல்கரடிகளின் தலைவிதியை மாற்றியமைத்துள்ளது.
மின்காயமடைந்த சுவியை, சாலையோரத்தில் கண்ட ஒரு தம்பதி ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தனது 3 பாதங்களின் கூர்நகங்களை இழந்தபோதும், சுவி உயிர் பிழைத்தது.
அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதும், காயமடைந்த சோம்பல் கரடிகளுக்கு உதவிகேட்டு நிறைய அழைப்புகள் மக்களிடமிருந்து வந்தன.
சுவியை மீட்ட நிகழ்வு, அதன் பெயரில் ஒரு மீட்பு மையம் தொடங்கவும் வழிவகுத்தது.
இந்த மீட்பு மையத்தின் நோக்கம், ஆபத்தில் இருக்கும் சோம்பல் கரடிகளை மீட்பது, மறுவாழ்வு அளிப்பது, விடுவிப்பது.
அவர்களின் கூற்றுப்படி, மின்சாரத் தாக்குதலே அதன் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணம். காடழிப்பு மற்றும் வாழ்விட இழப்பு அவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு