0
வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
வெனிசுவெலா நாட்டை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருத்தார்.
இந்நிலையில், வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுவெலாவின் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெனிசுவெலாவில் எண்ணெய், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் கவனித்து வந்தார்.
“நிர்வாக தொடர்ச்சியையும் தேசத்தின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுவெலா பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்” என நீதிமன்ற குறிப்பிட்டுள்ளது.
“ஜனாதிபதி இல்லாத நிலையில், அரசின் தொடர்ச்சி, அரசாங்க நிர்வாகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான பொருந்தக்கூடிய சட்ட கட்டமைப்பைத் தீர்மானிப்பதற்காக” நீதிமன்றம் இந்த விடயத்தை கலந்துரையாடும் என தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.