• Mon. Jan 5th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா அதிபரை சிறை பிடித்த அமெரிக்கா – ரஷ்யா, சீனாவின் நிலைப்பாடு என்ன?

Byadmin

Jan 4, 2026


அமெரிக்கா - வெனிசுவேலா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா பல ஆண்டுகளாக வெனிசுவேலாவிற்கு ராணுவ ஆதரவை வழங்கி வருகிறது.

    • எழுதியவர், நோபர்டோ பரேடஸ்
    • பதவி, பிபிசி செய்திகள் முண்டோ

(டிசம்பர் 14, 2025 அன்று வெளியான இந்த கட்டுரை சமீபத்திய தகவல்களுடன் மறுபகிர்வு செய்யப்படுகிறது)

வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார்.

இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.

By admin