• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா அதிபர் மதுரோ எங்கே? அமெரிக்காவில் என்ன நடக்கிறது? நேரலை தகவல்கள்

Byadmin

Jan 4, 2026


அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்

பட மூலாதாரம், TRUTH SOCIAL

படக்குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை அதிபர் ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெனிசுவேலாவுக்கு எதிரான ‘போர்’ அல்ல – மார்கோ ரூபியோ

அமெரிக்காவின் தாக்குதலால் கராகஸில் உருக்குலைந்த கார்கள் மற்றும் கட்டடங்கள்

பட மூலாதாரம், CBS News

படக்குறிப்பு, அமெரிக்காவின் தாக்குதலால் கராகஸில் உருக்குலைந்த கார்கள் மற்றும் கட்டடங்கள்

அமெரிக்க ஊடகங்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிரான போர் என குறிப்பிட்ட அவர், இது “வெனிசுவேலாவுக்கு எதிரான போர் அல்ல” என்று கூறினார்.

By admin