0
வெனிசுவேலா முன்னாள் துணை ஜனாதிபதி டெல்ஸி ரொட்ரிகீஸ் (Delcy Rodríguez) அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
வெனிசுவேலா தேசிய நாடாளுமன்றத்தின் தலைவரான ரொட்ரிகீஸின் சகோதரர், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மதுரோவும் அவருடைய மனைவியும் “இரண்டு தீரர்கள்” என்று ரொட்ரிகீஸ் புகழாரம் சூட்டினார்.
சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள துயரத்தின் காரணமாக மிகுந்த வேதனையோடு தாம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், வெனிசுவேலாவுக்குத் தாமே பொறுப்பாளர் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா வெனிசுவேலாவுடன் போரிடவில்லை, போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
வெனிசுவேலாவை நல்ல நிலைக்குக் கொண்டுவர வாஷிங்டன் விரும்புவதாகத் தெரிவித்த அவர், அதற்கான திட்டங்களை விவரிக்கவில்லை.