• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா குழப்பம் சீனாவுக்கு கூறும் செய்தி – தைவானில் என்ன நடக்கும்?

Byadmin

Jan 8, 2026


ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷி ஜின்பிங் தான் கற்பனை செய்ததை விடவும் அதிக அளவில் கணிக்க முடியாதவரான டொனால்ட் டிரம்ப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சீனா பல ஆண்டு காலமாக வளர்த்தெடுத்த ஒரு உறவை, டொனால்ட் டிரம்ப் வெறும் சில மணிநேரங்களில் தலைகீழாக மாற்றிவிட்டார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான், சீனாவின் மூத்த தூதர்களுடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை “ஒரு மூத்த சகோதரர்” என்றும், “உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கும் தலைவர்.” என்றும் அவர் புகழ்ந்து கொண்டிருந்தார்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலாவில் சீனா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது.

தென் அமெரிக்காவில் சீனாவின் நெருங்கிய கூட்டாளிகளில் வெனிசுவேலாவும் ஒன்று.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமலில் இருக்கும் 600 ஒப்பந்தங்களில் சிலவற்றை, கோட் சூட் அணிந்த நபர்கள் புன்னகையுடன் ஆய்வு செய்யும் காட்சிகளை சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பின.

By admin