• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

வெளிநாடுகளில் இந்தியர்கள் வெறுக்கப்படுகிறார்களா? – புலம்பெயர்ந்தோர் பாதுகாப்புக்கு என்ன வழி?

Byadmin

Oct 4, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எட்வர்ட் ஜோனாதன் டேவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் ஈ.டி டேவி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

செப்டம்பர் 23-ஆம் நாளன்று இரு தலைவர்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து ஆற்றிய உரைகள், உலகளாவிய விவாதப் பொருளாக மாறின.

பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான எட்வர்ட் ஜோனாதன் டேவி, தீவிர வலதுசாரி தலைவர்களை “இருண்ட சக்தி” என கடுமையாக விமர்சித்தார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் நிகேல் ஃபரேஜ், டாமி ராபின்சன் மற்றும் கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் போன்றவர்களையே அவர் குறிவைத்துப் பேசினார்.

மறுபுறம், நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எட்வர்ட் ஜோனாதன் டேவி வழங்கியதற்கு மாறான செய்தியை வழங்கினார். திறந்த எல்லைகளைக் கொண்டுள்ளதால், ஐரோப்பாவே நெருக்கடியில் ஆழ்ந்துவிட்டதாகவும், “இந்த நாடுகள் அழிவை நோக்கிச் செல்கின்றன” என்றும் எச்சரித்தார்.

By admin