0
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான கடவத்தை பொலிஸார், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக 22 முறைப்பாடுகள் இருப்பதாகவும் இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியவர்களிடமிருந்து அவர்களது கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடவத்தை பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் அந்நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.