• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

வெளிநாட்டு மாணவர்களை மேலும் உள்ளீர்க்கிறது அவுஸ்திரேலியா!

Byadmin

Aug 6, 2025


ஓர் ஆண்டுக்கான கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் தொகையை ஆஸ்திரேலியா அதிகரித்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான வரம்பு எதிர்வரும் ஆண்டில் 295,000ஆக உயர்த்தப்படவுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் நேற்று (05) இதனை அறிவித்தது.

நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது அது 9 சதவீதம் அதிகம் ஆகும்.

தற்போது அதிகமான மாணவர்கள் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா செல்கின்றனர்.

இந்நிலையில், தென்கிழக்காசிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியாவால் கூறப்பட்டது.

முன்னதாக அவுஸ்திரேலியாவில் குடியேற்றம் அதிகரித்ததால் வீடுகளின் விலையும் அதிகரித்தது. அதனைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டது. விசா கட்டணமும் உயர்த்தப்பட்டது.

எனினும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களின் தொகை அதிகரிப்பை அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் வரவேற்கின்றன.

The post வெளிநாட்டு மாணவர்களை மேலும் உள்ளீர்க்கிறது அவுஸ்திரேலியா! appeared first on Vanakkam London.

By admin