0
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் இராஜகிரிய – மொரகஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ கடிதத்திற்கு ஒத்த போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மெலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.