• Tue. Mar 17th, 2026

24×7 Live News

Apdin News

வெள்ளிமலை: வருசநாடு மலையில் 5 பேருக்காக மட்டுமே செயல்படும் வாக்குச்சாவடி – யார் அவர்கள்?

Byadmin

Mar 17, 2026


தேனி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு, தேர்தல்
படக்குறிப்பு, வெள்ளிமலையில் வாக்குச்சாவடியாக செயல்படவுள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் பள்ளி

தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.

“கற்கள் மட்டுமே நிறைந்துள்ள வனப்பகுதி வழியாக வாக்குச்சாவடியை அடையவே மூன்று மணிநேரத்துக்கு மேல் தேவைப்படும்” என ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வசிக்கும் அந்த 5 வாக்காளர்கள் யார்? பிபிசி தமிழிடம் அவர்கள் கூறியது என்ன?

வெள்ளிமலை – அமைவிடம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டு வருசநாடு ஊராட்சி அமைந்துள்ளது.

வருசநாட்டில் இருந்து குமணன் தொழுவு கிராமத்திற்குச் சென்று அங்கிருந்து காப்புக் காடுகள் வழியாக (Reserved forest) வெள்ளிமலைக்குச் செல்ல வேண்டும். மேகமலையின் மையப்பகுதியாக சுமார் 1,650 மீட்டர் உயரத்தில் வெள்ளிமலை அமைந்துள்ளது.

By admin