• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பண்பாட்டு பயணம்: முதல்வர் தொடங்கி வைத்தார் | vergalai thedi initiative

Byadmin

Aug 2, 2025


சென்னை: ‘வேர்​களைத் தேடி’ திட்​டத்​தின்​கீழ் 14 நாடு​களில் இருந்து தமிழகம் வந்​துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்​களின் பண்​பாட்டு சுற்​றுப் பயணத்தை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அயலகத் தமிழ் இளைஞர்​களுக்​கான ‘வேர்​களைத் தேடி’ என்ற கலாச்​சார பரி​மாற்ற சுற்​றுலா திட்​டத்தை சிங்​கப்​பூரில் கடந்த 2023-ல் நடை​பெற்ற தமிழ் கலை, பண்​பாட்டு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். தமிழ் கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்தை அயலக தமிழர்​களிடம் பரி​மாற்​றம் செய்​வது, புலம்​பெயர்ந்து வாழும் இளைஞர்​களுக்கு தமிழகத்​தின் ‘மரபின் வேர்​களோடு’ உள்ள தொடர்பை புதுப்​பிப்​பது ஆகிய​வையே இதன் நோக்​கம்.

அதன்​படி, ஆண்​டு​தோறும் அயல​கத்​தில் வாழும் 18-30 வயது தமிழ் இளைஞர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார்​கள். அவர்​கள் தமிழகத்​துக்கு அழைத்து வரப்​பட்​டு, தமிழக அரசு சார்​பில் வரலாற்று சிறப்​புமிக்க இடங்​களுக்கு சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள். தமிழின் தொன்​மை, தமிழர் வாழ்​வியல், கலாச்​சா​ரம், கட்​டிடம், சிற்​பக்​கலை, நீர் மேலாண்​மை, ஆடை, ஆபரணங்​கள், கலை இலக்​கிய பண்​பாடு, தொல்​லியல் ஆய்​வு​கள், அறிஞர்​கள் மற்​றும் சான்​றோர்​களு​டன் கலந்​துரை​யாடல் போன்ற நிகழ்ச்​சிகளி​லும் பங்​கேற்​பார்​கள்.

அதன்​படி, 17 நாடு​களை சேர்ந்த 194 தமிழ் இளைஞர்​களை கொண்ட 3 கட்ட பயணங்​கள் இது​வரை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இதில் பங்​கேற்​கும் அயலகத் தமிழ் இளைஞர்​கள் சுற்​றுலாவை முடித்து நாடு திரும்​பியதும், அவர்​களது நாட்​டில் தமிழகத்​தின் கலாச்​சார தூது​வர்​களாக செயல்​பட்​டு, தமிழர்​களின் கலாச்​சார பெரு​மை​களை பரப்​பு​வார்​கள்.

இந்​நிலை​யில், இந்த ஆண்​டில் 4-ம் கட்ட பயண​மாக, பிஜி,ரீயூனியன், மார்​டினிக், குவாடலூப், இந்​தோ​னேசி​யா, தென்​னாப்​பிரிக்​கா, மியான்​மர், மொரீஷியஸ், மலேசி​யா, இலங்​கை, பிரான்​ஸ், ஆஸ்​திரேலி​யா, கனடா, ஜெர்​மனி ஆகிய 14 நாடு​களை சேர்ந்த 99 அயலக தமிழ் இளைஞர்​கள் ஆகஸ்ட் 1 முதல் 15-ம் தேதி வரை 15 நாட்​களுக்கு தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்கு அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர்.

சென்​னை​யில் இந்த பயணத்தை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். அவர்​களது பயணத்​துக்கு தேவை​யான பொருட்​களை​யும் வழங்​கி​னார். இந்த நிகழ்​வில் அமைச்​சர் சா.​மு.​நாசர், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்​கர், அயலக தமிழர் நலன் ஆணை​யர் வள்​ளலார்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



By admin