• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் பொருள்கள் குறித்த கோப்புகளை வெளியிட ட்ரம்ப் உத்தரவு!

Byadmin

Feb 20, 2026


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வேற்று கிரகவாசிகள், அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) தொடர்பான அனைத்து அரசாங்க கோப்புகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒருங்கிணைந்த நிகழ்ச்சியில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து எந்தவொரு ஆதாரங்களையும் முன்வைக்காமல் உண்மை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ட்ரம்ப், ஒபாமாவின் கூற்றை தவறானதாகக் கருதி, தற்போது அனைத்துக் கோப்புகளையும் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஆகிய அதிகாரிகள் இதற்கு சதகமாக பதிலளித்தனர்.

அதேவேளை, குடியரசுக் கட்சியின் பிரதிநிதி தாமஸ் மாஸி உள்ளிட்ட சிலர், சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுவதில் இருந்து இது ஒரு திசைதிருப்பலாக இருக்கலாம் என விமர்சித்துள்ளனர்.

By admin