• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

வேலூர்: வக்ஃப் நிலத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேற நிர்பந்தமா? பிபிசி தமிழ் ஆய்வில் தெரியவந்தது என்ன?

Byadmin

Apr 19, 2025


 வக்ஃப், வேலூர்
படக்குறிப்பு, ”காலியாக இருந்த இடத்தில் காலம்காலமாக வசித்து வருகிறோம்” என்கிறார் தமிழ்ச்செல்வி.

“மசூதிக்கு சொந்தமான வக்ஃப் வாரிய இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகிறீர்கள். இது சட்டத்துக்கு எதிரான செயல். இனி தரைவரி செலுத்தாவிட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்”.

வேலூர், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி அன்று இப்படியொரு நோட்டீஸ் வந்துள்ளது.

அதே பகுதியில் உள்ள ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் முத்தவல்லி சையது சதாம் என்பவர்தான் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

ஆனால், ‘நான்கைந்து தலைமுறைகளாக வசிக்கும் தங்களுக்கே நிலத்தை ஒதுக்க வேண்டும்’ எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

By admin