• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

வேலைக்கு விண்ணப்பிக்க சரியான ரெஸ்யூம் தயாரிப்பது எப்படி?

Byadmin

Mar 30, 2025


Resume, Curriculam Vitae, Job search, AI

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கராச்சியின் அராம் அஹ்சான் அலி, இளம் பாகிஸ்தானியர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ‘கனவு வேலைகளை’ பெற உதவுகிறார்.

நான்கு ஆண்டுகளாக ப்யோடேட்டா, கவர் லெட்டர் மற்றும் லிங்க்ட்இன் சேவைகளை வழங்கி வரும் அராம், நல்ல கல்வி மற்றும் அனுபவம் இருந்தபோதிலும் பெரும்பாலான விண்ணப்பதாரர்களால் தங்களது சிவியை நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று கருதுகிறார்.

“ஒரு ஆள்சேர்ப்பு செய்பவருக்கு அதற்கு விண்ணப்பித்தவர் அளித்த சுய விவரக் குறிப்புகளை பார்க்க 7 வினாடிகள் மட்டுமே இருக்கும். விண்ணப்பதார்களிடம் திறமை இருந்தபோதிலும் ஈர்க்கக்கூடிய curriculam vitae இல்லாததால் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

70 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் அவை எவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்படாத தனது வாடிக்கையாளர் ஹம்சாவின் உதாரணத்தை அரம் மேற்கோள் காட்டுகிறார்.

By admin