• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

வேளச்சேரி தொகுதியை கைப்பற்றும் த.வெ.க.? மக்கள் கூறுவது என்ன?

Byadmin

Mar 18, 2026


தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த தேர்தல்களை போல அல்லாமல், இத்தேர்தல் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அரசியல் தலைவர்களைவிட மக்களே தேர்தல் முடிவுகளுக்காக அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்றேக் கூறலாம். அதற்கு காரணம் தமிழக வெற்றிக் கழகம். சினிமா நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கிய அரசியல் கட்சி.

ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய், பல ஆண்டுகளாக எதிர்பார்த்ததைப் போல அரசியலில் குதித்தார். அரசியலில் நுழைந்தபின்பு, இரண்டு தேர்தல்கள் வந்தாலும், முதலமைச்சர் தேர்தலே இலக்கு என தெரிவித்திருந்தார்.

இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலும் நெருங்கிவிட்டது. இத்தேர்தலில் தாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என தவெக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கிய எந்தவொரு கட்சியும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்ததில்லை.

ஆனால் நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களும் நிச்சயம் அவர் முதலமைச்சர் ஆவார் எனக்கூறி வருகின்றனர். இதனால் இத்தேர்தல் முடிவுகள் பெரும் சுவாரசியத்தை கூட்டியுள்ளன.

இதனிடையே ஊடகங்கள் தொகுதிவாரியாக சென்று கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் மாலைமலர் தரப்பில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி பகுதியில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில் விஜய்க்கே பெரும் ஆதரவு உள்ளது.

ஆனால் தேர்தல் முடிவு மாறுபடுமா என்பதை மே.4ஆம் தேதி பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

By admin