• Tue. Nov 24th, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன் குவிப்பு – அவரது புதிய சாதனைகள் என்னென்ன?

Byadmin

Nov 24, 2026


தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி , 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் அடக்கம்.

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய அவர், 7 பவுண்டரிகள் 28 சிக்ஸர்களுடன் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் உள்ளிட்ட முந்தையை சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த 15 வயதான சூர்யவன்ஷி, 29 பந்துகளில் அதிவேக சதமடித்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கின் சாதனையை தகர்த்தார்.

சதமடித்தும் அதிரடியை நிறுத்தாத சூர்யவன்ஷி, அடுத்த 100 ரன்களை வெறும் 24 பந்துகளில் அடித்து ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார்.

52 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 103 பந்துகளில் அதிவேக இரட்டை சதமடித்த நியூசிலாந்தின் சாட் போவ்ஸின் சாதனையை முறியடித்தார்.

By admin