• Tue. Mar 17th, 2026

24×7 Live News

Apdin News

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை ஏன்? என்ன நடக்கிறது?

Byadmin

Mar 17, 2026


வைரமுத்து

பட மூலாதாரம், FACEBOOK

பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் எனும் பெருமையை வைரமுத்து பெற்றுள்ளார்.

வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் மீது ஏற்கனவே எழுப்பப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பான ‘மீடூ’ (MeToo) குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன.

வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்கிய நபர்களுள் ஒருவரான பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது குறித்து இலக்கிய உலகிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

தனக்கு விருது வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்த வைரமுத்துவின் கருத்தை அறிய அவரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. எனினும், அவருடைய கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய கருத்து பெறப்பட்டவுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

By admin