• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

வொர்க்  ஃப்ரம் ஹோம் போயாச்சு…  வொர்க் ஃப்ரம் களம் வந்தாச்சு! – மக்கள் பிரச்சினையில் வரிந்து கட்டும் தவெக | about tvk vijay politics was explained

Byadmin

Mar 19, 2025


வொர்க் ஃப்ரம் ஹோம் மோடிலேயே கட்சி நடத்துகிறார் என விஜய்யை அவரைப் பிடிக்காதவர்கள் கிண்டலடித்த நிலையில், அந்த அவச்சொல்லை போக்குவதற்காக களத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட ஆரம்பித்துவிட்டார்கள் தவெக தொண்டர்கள்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கு​வ​தால் அதி​முக-​வும் பாஜக-​வும் போட்டி போட்​டுக் கொண்டு திமுக அரசுக்கு எதி​ரான பிரச்சினைகளை கையிலெடுத்து வாள் சுழற்றி வரு​கின்​றன. இந்​தச் சூழலில், “அடுத்த 60 வாரங்​களுக்கு விஜய் தான் எதிர்க்​கட்சி தலை​வ​ராக இருக்​கப் போகி​றார். அவர் மக்​களோடு மக்​களாக களத்​துக்கு வரப் போகி​றார்” என்​றெல்​லாம் தவெக தரப்​பில் எதிர்​பார்ப்​பு​களை எகிற​வைத்து வரு​கி​றார்​கள். அதற்கு முன்​னோட்​ட​மாக அதி​முக, பாஜக-வுக்கு போட்​டி​யாக தவெக-​வினரும் மக்​கள் பிரச்​சினைகளுக்​காக களத்​துக்கு வந்​திருக்​கி​றார்​கள்.

சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் வாரி​யாக நீண்ட நாட்​களாக தீர்க்​கப்​ப​டாத அடிப்​படை பிரச்​சினை​கள், மக்​களைப் பாதிக்​கும் அம்​சங்​களை கணக்​கெடுத்து வரும் தவெக-​வினர், அந்​தப் பிரச்​சினை​களுக்​காக மக்​களைத் திரட்டி போராட்​டங்​களை​யும் முன்​னெடுத்து வரு​கி​றார்​கள்.

அதன்​படி, கோவை தெற்கு மாவட்ட தவெக-​வினர் கோவை மக்​களுக்கு தீராத தலை​வலி​யாகிப் போன வெள்​ளலூர் குப்​பைக்​கிடங்கு விவ​காரத்​துக்​காக பெரும் கூட்​டத்தை திரட்டி போராட்​டம் நடத்​தி​யுள்​ளனர். அதே​போல் கோவை மாநகர் மாவட்ட தவெக நிர்​வாகி​கள் அடிப்​படை பிரச்​சினை​கள் தொடர்​பாக வாரம் தோறும் மாவட்ட ஆட்​சி​யரை சந்​தித்து மனுக்​களை அளித்து வரு​கின்​ற​னர்.

இது தொடர்​பாக கோவை தெற்கு மாவட்ட தவெக செய​லா​ளர் கே.​விக்​னேஷிடம் பேச்​சுக்​கொடுத்​தோம். “மக்​களுக்கு நல்​லது செய்​வோம்னு சொல்லி அரசி​யல் கட்​சியை தொடங்​கி​விட்​டோம். இனி நமது வேலை அனைத்​துமே மக்​களுக்​கான​தாக இருக்க வேண்​டும். மக்​கள் பிரச்​சினை​களை கண்​டறிந்​து, அதை தீர்க்க பாடு​படு​வதே நமது இலக்​காக இருக்க வேண்​டும் என எங்​கள் தலை​வர் தளபதி விஜய் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதனடிப்​படை​யில், மக்​களின் அடிப்​படை தேவை​கள், பிரச்​சினை​களுக்​காக அதி​காரி​களைச் சந்​தித்து மனுக்​களை அளித்து வரு​கி​றோம். தேவைப்​பட்​டால் போராட்​டங்​களை​யும் நடத்த ஆரம்​பித்​திருக்​கி​றோம். மக்​களுக்​கான அடிப்​படைத் தேவை​கள் கிடைப்​ப​திலேயே நிறைய குறை​பாடு​கள் உள்​ளது.

வெள்​ளலூர் குப்​பைக்​கிடங்கு விவ​காரம், வீடற்​றவர்​களுக்கு அரசு வீடு​கள் கட்​டித் தருதல், சாலை வசதி போன்ற பல்​வேறு பிரச்​சினை​கள் உள்​ளன. இதிலெல்​லாம் திமுக அரசு உரிய கவனம் செலுத்​த​வில்​லை. அதனால் மக்​கள் எங்​களைத் தேடி வரு​கின்​ற​னர். நாங்​கள் ஒரு விஷ​யத்தை கையில் எடுத்​தால், அதற்​கான தீர்வு கிடைக்​கும் வரை விட​மாட்​டோம். அந்த நம்​பிக்கை இருப்​ப​தால் தான் மக்​கள் எங்​களிடம் வரு​கி​றார்​கள்” என்று சொன்​னார் அவர்.

தவெக-​வின் திடீர் போராட்​டங்​கள் குறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக செய​லா​ள​ரான நா.​கார்த்​திக் நம்​மிடம் பேசுகை​யில், “விஜய் கட்​சி​யினர் இப்​போது​தான் புதி​தாக அரசி​யலுக்கு வந்​துள்​ளனர். ஆனால் நாங்​கள், எங்​கள் வாழ்க்​கை​யையே பொது​வாழ்க்​கைக்​காக அர்ப்​பணித்​தவர்​கள். எதிர்க்​கட்​சி​யாக இருந்​தா​லும், ஆளும் கட்​சி​யாக இருந்​தா​லும் மக்​கள் பிரச்​சினை​களை தீர்ப்​ப​தில் நாங்​கள் சமரசம் இல்​லாமல் பணி செய்​பவர்​கள்.

கோவை​யில், செம்​மொழிப் பூங்​கா, கலைஞர் நூல​கம், மேற்கு புறவழிச்​சாலை, அவி​நாசி சாலை உயர்​மட்​டப் பாலம் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களை திமுக அரசு செயல்​படுத்தி உள்​ளது. சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைப்​ப​தற்​கான நடவடிக்​கை​கள் துரிதப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பில்​லூர் 3 உள்​ளிட்ட பல்​வேறு கூட்​டுக்​குடிநீர் திட்​டங்​களை தந்​துள்​ளோம். மாநகரில் ரூ.400 கோடி மதிப்​பில் சாலை​கள் போடப்​பட்​டுள்​ளன. சமீபத்​தில் கூட, மாநகர சாலை சீரமைப்​புக்​காக முதல்​வர் ரூ.200 கோடி ஒதுக்​கி​யுள்​ளார்.

வெள்​ளலூர் குப்​பைக் கிடங்​கில் பயோ-மைனிங் திட்​டம் உள்​ளிட்​டவை மேற்​கொள்​ளப்​படு​கிறது. இப்​படி அனைத்து விஷ​யத்​தி​லும் நாங்​கள் மக்​களோடு மக்​களாக களத்​தில் நின்று பணி செய்து வரு​கி​றோம். தவெக-​வினர் தங்​களை விளம்​பரப்​படுத்​திக் கொள்​ள​வும் அரசி​யலுக்​காக​வும் அரசுக்கு எதி​ராக போராட்​டங்​களை நடத்​திப் பார்க்​கி​றார்​கள்” என்​றார். நாரதரின் கலகத்​தைப் போல தவெக தம்​பி​மார்​கள் நடத்​தும் போராட்​டங்​களும் மக்​களுக்கு நன்​மை​யில் முடிந்​தால் சரி​தான்​!



By admin