• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

வ.உ.சிதம்பரனாரின் சுதேசி கப்பல் நிறுவனத்தில் பெரியார் முதலீடு செய்தாரா? ஒரு வரலாற்றுத் தேடல்

Byadmin

Dec 28, 2025


பெரியார் - வ.உ.சிதம்பரனார், சுதேசி கப்பல் நிறுவனம்

பட மூலாதாரம், Dhileepan ramakrishnan/A.R. Venkatachalapathy/Swadeshi Steam

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வ.உ. சிதம்பரனார் துவங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தில் பெரியார் முதலீடு செய்தாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

ஒரு ஃபேஸ்புக் விவாதத்தில்தான் இந்த விவகாரம் துவங்கியது. பெரியாரியலாளரான வாலாசா வல்லவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பெரியார் தொடர்பாக வீரமணி தொகுத்த நூலின் ஒரு பக்கத்தை வெளியிட்டு, வ.உ.சியின் கப்பல் நிறுவனத்திற்கு பெரியார் பங்களிப்புச் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அந்த ஃபேஸ்புக் பதிவிலேயே வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கைய்யா முருகன் உள்ளிட்டோர், இது தொடர்பாக சந்தேகங்களைப் பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, அந்த விவாதம் அந்த ஃபேஸ்புக் பக்கத்தைத் தாண்டியும் பரவியது. வேறு சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடந்தன.

தன்னுடைய முன்னோடியாக வ.உ. சிதம்பரனாரை பெரியார் குறிப்பிட்டிருந்தாலும் அவரது கப்பல் நிறுவனத்தில் பெரியார் முதலீடு செய்யவில்லை என சிலர் குறிப்பிட்டனர். ஆனால், பெரியாரியலாளர்கள், பெரியார் அவருடைய சொந்தத் தொகை 5,000 ரூபாய் உள்பட சுமார் 35,000 ரூபாயை கப்பல் நிறுவனத்திற்காகத் தந்தார் என வாதிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்கள் சொல்வதென்ன?

பெரியார் - வ.உ.சிதம்பரனார், சுதேசி கப்பல் நிறுவனம்

பட மூலாதாரம், A.R. Venkatachalapathy/Swadeshi Steam

படக்குறிப்பு, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle Against the British Maritime Empire நூல்

இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, முதலில் ஒரு சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென வ.உ. சிதம்பரனார் ஏன் விரும்பினார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பான தகவல்களை வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle Against the British Maritime Empire’ நூல் விரிவாகத் தருகிறது.

By admin