• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாள்: ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை | Governor, Deputy Chief Minister and Ministers pay respect for v o chidambaram 154th birthday

Byadmin

Sep 6, 2025


சென்னை: கப்​பலோட்​டிய தமிழன், செக்​கிழுத்த செம்​மல் எனப் போற்​றப்​படும் சுதந்​திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்​பர​னாரின் 154-வது பிறந்த தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்த வஉசி படத்​துக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அதே​போல், தமிழக அரசின் செய்​தித் துறை சார்​பில் கிண்டி காந்தி மண்​டபம் வளாகத்​தில் உள்ள வஉசி சிலைக்கு அருகே மலர்​களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது உரு​வப் படத்​துக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி தேனி மாவட்​டம் பழனிசெட்​டிப்​பட்​டி​யில் வஉசி​யின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். சென்னை துறை​முக வளாகத்​தில் உள்ள வஉசி சிலைக்கு கீழ் வைக்​கப்​பட்ட அவரது உரு​வப் படத்​துக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் மாலை அணி​வித்து மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். துறை​முக நுழைவு வாயி​லில் உள்ள வஉசி சிலைக்கு பாஜக மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த

அவரது படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை துறை​முகத்​தில் வஉசி​யின் படத்​துக்கு துறை​முகத்தலை​வர் சுனில் பாலி​வால், தலைமை கண்​காணிப்பு அலுவலர் எஸ்​.​முரளி​கிருஷ்ணன் ஆகியோர் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில், “உண்​மை​யான சுதேசி உணர்​வோடு, செக்​கிழுத்​துச் செங்​குருதி சிந்​தி, தியாக வாழ்​வுக்​கோர் எடுத்​துக்​காட்​டாக – நாட்​டுப்​பற்​றுக்கு இலக்​கண​மாக நம் நெஞ்​சங்​களில் வாழும் கப்​பலோட்​டிய தமிழர் வ.உ.சிதம்​பர​னாரின் பெரு​வாழ்​வை, அவரது 154-வது பிறந்​த​நாளில் நினை​வு​கூர்ந்து போற்​றுகிறேன்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.



By admin