• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

ஷங்கர் மீது கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு

Byadmin

Apr 25, 2025


“நான் சொன்ன கதையை அப்படியே எடுக்காமல், ஷங்கர் அதை மாற்றிவிட்டார்” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் ஷங்கர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையைத்தான் ‘கேம் சேஞ்சர்’ என்கிற பெயரில், ஷங்கர் இயக்கினார். இந்த படத்தில் ராம் சரண், கியரா அத்வானி நடித்திருந்தார்கள். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்தது.

இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “ஷங்கரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவரது படத்துக்கு நான் கதை எழுதுவேன் என யோசித்தும் பார்க்கவில்லை. அது எனக்கு கிடைத்த பெருமை. அப்படித்தான் அவரிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பற்றிய கதையை, கூறினேன். அதன் பிறகு அந்த கதை, வேறொரு உலகத்துக்கு சென்றுவிட்டது. அதில் நிறைய பேர் எழுதினார்கள். கதை, திரைக்கதை முற்றிலுமாக மாற்றப்பட்டது” என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

The post ஷங்கர் மீது கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு appeared first on Vanakkam London.

By admin