• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

ஷபூர்ஜி சக்லத்வாலா: டாடா குடும்ப வாரிசு ஒரு கம்யூனிஸ்டாக மாறியது எப்படி? காந்தியுடன் முரண்பட்டது ஏன்?

Byadmin

Oct 21, 2024


டாடா குழுமத்தை நிறுவிய ஜம்செட்ஜி டாடாவின் மருமகன்

பட மூலாதாரம், Picryl

படக்குறிப்பு, ஷபூர்ஜி சக்லத்வாலா

‘ஷபூர்ஜி சக்லத்வாலா’ என்ற மனிதரின் பெயர் பெரும்பாலான மக்களை சென்றடையாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் அதி-செல்வமிக்க டாடா குடும்ப உறுப்பினரான இவரைப் பற்றி சொல்ல நிறைய கதைகள் உள்ளன.

ஷபூர்ஜி சக்லத்வாலாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களை கொண்டது. அவரது வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விடாமுயற்சியால் நிறைந்திருந்தது. எந்த சூழலிலும் அவர் தனது வசதியான உறவினர்களின் குடும்பப் பெயரையோ அல்லது அவர்களின் செல்வாக்கையோ பயன்படுத்தவில்லை.

அந்த குடும்ப உறுப்பினர்களை போல அல்லாமல், உலகின் மிகப்பெரிய வணிக ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் அந்த போட்டிக்கும் வரவில்லை.

அதற்கு பதிலாக அவர் ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்தார். இந்தியாவில் காலனித்துவ ஆதிக்கம் செய்த பிரிட்டிஷ் அரசின் மையமான பிரிட்டன் நாடாளுமன்றத்தில், இந்திய சுதந்திரத்திற்காக அவர் பேசினார். மகாத்மா காந்தியுடன் கூட மோதினார்.

By admin