• Sat. Oct 17th, 2026

24×7 Live News

Apdin News

ஷாய் ஹோப் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்றிலும் வெஸ்ட் இண்டீசின் நம்பிக்கை நட்சத்திரமானது எப்படி?

Byadmin

Oct 17, 2026


இந்திய மண்ணில் புதிய சாதனை: வெஸ்ட் இண்டீசின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் ஷாய் ஹோப்பிடம் 'தோனி தாக்கம்'

இந்திய சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரே ஹோப்பாக (நம்பிக்கை) அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் திகழ்ந்து வருகிறார். ஹைதராபாத்தில் புதன்கிழமை நடந்த நான்காவது ஆட்டத்தில், 50 பந்துகளில் சதமடித்த அவர், அணியின் வெற்றிக்கு உதவியதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என உயிர்ப்புடன் நீடிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒருநாள் தொடர், டி20 தொடர் என ஒட்டுமொத்தமாக இந்தச் சுற்றுப்பயணத்தில் இதுவரை 4 சதங்களை ஹோப் குவித்துள்ளார். நேற்றைய சதத்தின் 102*(50) மூலம் இந்திய மண்ணில் ஒரு சுற்றுப்பயணத்தில் அதிக சதங்கள் குவித்த அயல்நாட்டு வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக சதங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

கெயில், பொல்லார்ட், ரஸல் போன்ற கரிபீயன் தீவுகளின் டி20 ஸ்பெஷலிஸ்ட்களுடன் ஹோப்பை ஒப்பிட முடியாது. கிளாசிக்கலான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே ஃபீல்டர்கள் இல்லாத திசை பார்த்து பந்தை அடித்து ஆபத்தின்றி ரன்கள் சேர்க்கும் வித்தை தெரிந்தவர் இவர். பந்துவீச்சாளர் எப்போது தவறு செய்வார் என்று காத்திருந்து கட்டுப்பாட்டுடன் அதிரடி காட்டும் அவருடைய பாணியை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஒப்பிடலாம்.

கிளாசிக் கரீபியன் பேட்டர்

நான்காவது டி20 ஆட்டத்தையே ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஹோப் எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து ஆட முயற்சிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் ரவுண்ட் த விக்கெட் கோணத்தில் பந்துவீசி தனக்கு நெருக்கடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை மிகவும் கவனமாக எதிர்கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங்கை எதிர்கொள்ளும் போது மட்டுமே அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 190-க்கும் கீழாக இறங்கியது.

இஎஸ்பிஎன் இணையதள தரவின்படி நேற்றைய ஆட்டத்தில் ஹோப்பின் கண்ட்ரோல் பர்சென்டேஜ் 92% ஆகும். பேட்ஸ்மேன்களின் தடாலடிக்கு பெயர் போன டி20 கிரிக்கெட்டில் அவருடைய இத்தகைய கட்டுப்பாடு மிரள வைக்கிறது.

By admin