• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

ஷைலஜா பாயிக்: நகர்ப்புற குடிசை வாழ்க்கை டூ அமெரிக்க பேராசிரியர் – ரூ.6.7 கோடி நிதியுதவி பெற்றது எப்படி?

Byadmin

Oct 6, 2024


பேராசிரியர் ஷைலஜா பாயிக்

பட மூலாதாரம், MacArthur Foundation & Shailaja Paik

படக்குறிப்பு, பேராசிரியர் ஷைலஜா பாயிக்

“நாங்கள் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி இருக்காது. கழிவறைகள்கூட இல்லை. எங்கள் குடியிருப்புகளைச் சுற்றி குப்பை மேடுகள் சூழ்ந்திருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகள் இன்னமும் என்னை நிலைகுலைய வைக்கிறது.”

‘கழிவறை வசதிகூட இல்லாமல் இருந்த நகர்புற குடிசைப் பகுதியில் இருந்து அமெரிக்காவில் பேராசிரியராக’ பணியில் அமர்ந்தார் ஷைலஜா பாயிக். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. தற்போது மதிப்புமிக்க ‘மேக்ஆர்தர்’ (‘MacArthur’) ஃபெல்லோஷிப்பை (ஆதரவு ஊதியம்) பெறும் முதல் தலித் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த ஆதரவு ஊதியத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 71 லட்சம்) நிதியை ஐந்து ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டங்களில் பெறுவார்கள்.

ஷைலஜா பாயிக் தனது ஆராய்ச்சியின் மூலம் தலித் பெண்களின் வாழ்க்கையை முழுமையாக விளக்கியுள்ளார்.

By admin