• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

ஸோஹ்ரான் மம்தானி வெற்றி விழாவில் நேருவின் உரை ஒலித்தது ஏன்?

Byadmin

Nov 7, 2025


நியூயார்க்கில் வெற்றி பெற்ற மம்தானி-  மீண்டும் ஒலித்த நேருவின் உரை

பட மூலாதாரம், Getty Images

“வரலாற்றில் அரிதாகவே ஒரு தருணம் வரும் – அப்போது நாம் பழையதிலிருந்து புதியதுக்குள் ஒரு அடியை எடுத்து வைக்கிறோம்,” என புதன்கிழமையன்று நியூயார்க்கில் உற்சாகமாக கூடிய மக்கள் மத்தியில் ஸோஹ்ரான் மம்தானி கூறினார்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டி, மம்தானி பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மம்தானி, “ஒரு யுகம் முடிவடையும் போது, ஒரு தேசத்தின் ஆன்மா தனது குரலை வெளிப்படுத்துகிறது. இன்று நாம் பழையதை விட்டு புதியதை நோக்கி செல்கிறோம்,” என்றார்.

மம்தானி வெற்றி உரையை முடிந்தவுடன், 2004-ல் வெளியான பாலிவுட் திரைப்படமான தூம் படத்தின் பாடல் அரங்கில் ஒலித்தது.

பின்னர், ஜே-ஸி மற்றும் அலிசியா கீஸின் எம்பயர் ஸ்டேட் ஆஃப் மைண்ட் பாடல் ஒலித்தது. நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயராக, மம்தானி வரலாறு படைத்த தருணத்தில், இந்தப் பாடல் புதிய அர்த்தத்தைப் பெற்றது.

By admin